கேளிக்கை

திரிஷாவின் திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சியில்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகின்றார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ என சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சந்தோஷம் தான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சந்திமால் மற்றும் விஷ்வ அரசியலில்…

wpengine

எல்லை மீறும் அமலா [PHOTOS]

wpengine

உடல் நலக்குறைவு காரணமாக பிரபல நடிகர் மருத்துவமனையில்…

wpengine