உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஞாயிறு (2) திருகோணமலை புல்மோட்டை இலுப்பையடிச்சந்தியில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், அசாத் சாலி, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் ஜெனௌபர் மற்றும் கைத்தொழில் மற்றும் வணிகவளத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்னும் இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் முஸ்லிம் மக்கள் கட்சிகள் இரண்டாகப் பிளவுற்ற நிலையில், இரண்டு கட்சிகளும் ஒரே கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine

மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை – எஸ்.எம்.எம்.முஷாரப்..!

wpengine

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு…

wpengine