கேளிக்கை

திருமண திகதியை 03 மாதம் தள்ளிப் போட்ட பாவனா…

திருமணத்தை விட அதற்குப் பிறகான என் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன் என நடிகை பாவனா கூறியுள்ளார்.

என் நிச்சயதார்த்த விழா 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத சம்பவங்கள் காரணமாக குறுகியகாலத்தில் முடிந்து விட்டது.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்த மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். பாவனாவும், கன்னட தயாரிப்பாளர் நவீனும் காதலிக்கின்றனர். ஒக்டோபர் 26ம் திகதி இவர்களின் திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென்று ஜனவரி மாதத்துக்கு திருமண திகதி மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை திருமணத்துக்காக ஆடைகளோ, வேறெந்த பொருட்களையோ வாங்க ஷாப்பிங் செல்லவில்லை. காரணம், என் திருமணத்துக்கு இன்னும் 3 மாத காலம் அவகாசம் இருக்கிறது. ஜனவரியில் என் திருமணம் நல்லமுறையில் நடக்கும் என பாவனா கூறியுள்ளார்.

Related posts

‘ஆடை’ படம் – அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்

wpengine

“நான் செய்ய நினைத்ததை செய்தேன்.. என்னை விமர்சித்தவர்களை மன்னிப்பேன்..”- இலங்கையின் கவர்ச்சி சட்டத்தரணி..

wpengine

‘Dark Phoenix’ ஸ்கோப் திரையரங்கில்..

wpengine