உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

கொழும்பு திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்.

வகுப்பு தடைக்கு உள்ளான மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்கி அவர்களுக்கும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை, பல்கலைக்கழகமானது இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம்.

எமது கோரிக்கைகளை உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் தீர்த்து வைக்காவிடின், நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்…

wpengine

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine

2வது நாளாகவும் துணை மருத்துவ சேவை தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்கின்றது….

wpengine