உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான போலி ஆவண வழக்கில் இருதரப்பும் இணக்கம்…

(FASTNEWS|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக போலி ஆவண தயாரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இரு தரப்பினரும் சமரசமாக இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(25) குறித்த வழக்கு கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் விகும் களுவாரச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் இருதரப்பும் சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த சமரசம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அடுத்த மாதம் 4 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திட்டமிட்டப்படி இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெறும்…

wpengine

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல்

Azeem Kilabdeen

பால்மா தட்டுப்பாடு : அரசிடம் தீர்வில்லை

wpengine