ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தீபிகாவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்…

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ‘ராம்லீலா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜோடியாக நடித்ததிலிருந்தே இருவரும் பல இடங்களில் ரகசியமாக சந்தித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்று வந்த தீபிகாவை, இரவு முழுவதும் கண்விழித்து ரன்வீர் வரவேற்றது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ராம் லீலா’ படத்திற்கு பிறகு ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் தற்போது ‘பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை முடித்த கையோடு, தீபிகா படுகோனே விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாடு பறந்து போனார்.

வெளிநாடு சென்றுள்ள தீபிகா, திரும்பி வரும்போது அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ரன்வீர் சிங், தீபிகா வெளிநாட்டில் இருந்து திரும்பும் முந்தைய நாள் இரவு தனது நண்பர்களுடன் மும்பை புறநகர் பகுதியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அங்கிருந்து நேராக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு காரை பார்க்கிங் செய்துவிட்டு, இரவு முழுவதும் காரிலேயே கண்விழித்து அமர்ந்திருந்திருக்கிறார். தீபிகா சரியாக 4 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். அவரை பார்த்ததும் ரன்வீர் வேகமாக காரிலிருந்து இறங்கி, அவருக்காக தான் வாங்கிச் சென்றிருந்த பூச்செண்டை தீபிகா வசம் கொடுத்து, அவருக்குசர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அதிகாலையிலேயே தன்னை வரவேற்க வந்த ரன்வீரை கண்டதும் தீபிகா ஒரு சில நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

Related posts

நாமல் ராஜபக்ஷ முறையற்ற விதத்தில் சட்டத்தரணியாக்கிய சாட்சியங்கள் அம்பலம்..

wpengine

11 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 30 வயது ஆசிரியர்

wpengine

கோடிக்கணக்கான சொத்துக்களை நாட்டுக்காக கொடுத்த சிறந்த அரசியல்வாதி

wpengine