உலக செய்திகள்

துருக்கி இராணுவ பிடியில் பக்தாதியின் சகோதரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ. எஸ். ஐ .எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் சகோதரி ரஸ்மியா அவாத் (Rasmiya Awad) சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

மேலும், அவரும் அவரது கணவர் மற்றும் மருமகளும் இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரிய நகரமான ஆசாஸ் அருகே நேற்று(04) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அல் பக்தாதியின் சகோதரியான 65 வயதான ரஸ்மியா அவாத் கைது செய்யப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன் – டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர்..!

wpengine

ஸ்பெயினில் 20,000த்தை கடந்த உயிரிழப்புகள்

wpengine

ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் மரணம்

wpengine