Top Story 3உள்நாட்டு செய்திகள்

துறைமுகநகர சட்டமூலம் : உயர்நீதிமன்ற வியாக்கியானம் அறிவிப்பு 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று சபையின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடிப்படைவாத குற்றச்சாட்டு : இருவர் கைது

wpengine

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கைதாகிய மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்..

wpengine

அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்

Azeem Kilabdeen