உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் ப்ரியத் பந்துவிக்ரம மற்றும் மேலும் இரண்டு பேருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஒருவருக்கு தலா 500 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, துறைமுக அதிகார சபையின் 319 சேவையாளர்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தி  துறைமுக அதிகார சபைக்கு 650 லட்ச ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமைக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : பாராளுமன்றின் ஊடாக மாற்றம் செய்ய முடியும் – நீதி அமைச்சர்

News Editor

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபை..

wpengine

33வது ஒலிம்பிக் போட்டியினை அமெரிக்காவில் நடாத்த ட்ரம்ப் விருப்பம்..

wpengine