விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா பிரபல வீரர் சோட்சோபே இற்கு 8 ஆண்டுகள் விளையாட தடை…

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

33 வயதான தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான லொன்வாபோ சோட்சோபே (Lonwabo Tsotsobe) இற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் T20 போட்டியில் லொன்வாபோ சோட்சோபே சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் குற்றச்சாட்டை மறுத்த லொன்வாபோ சோட்சோபே பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.

விசாணையின் முடிவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சோட்சோபேக்கு 8 ஆண்டு விளையாட தடை விதித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

(rizmira)

Related posts

‘ஆண்கள் என்றால் உங்களுக்கு இஷ்டமா’ – ஜோ ரூட் தொடர்பில் கேப்ரியலின் கருத்தினால் சர்ச்சை…

wpengine

சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட் கைது…

wpengine

ஆப்கானிஸ்தான் அணி அணிக்கெதிரான பங்களாதேஷ் அணி அறிவிப்பு.

wpengine