உள்நாட்டு செய்திகள்

தென் மாகாணத்தினுள் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் இதுவரை 5 குழந்தைகள் பலி…

தென் மாகாணத்தினுள் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார பிரிவுகள் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேடமாக இனங்காண முடியாத குறித்த இந்த காய்ச்சல், குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

தங்காலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் அதிகமாக இந்த காய்ச்சல் பரவியுள்ள நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த தினங்களில் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 குழந்தைகள் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் நோயார்களை காண வருவோர் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கராபிட்டிய மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் அருணத சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சூழலியல் விஞ்ஞான முதுகலை பரீட்சையில் சஜித் ‘A‘ சித்தி

wpengine

மரக்கன்றுகள் நாட்டும் விசேட நிகழ்வு இன்று(15)…

wpengine

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் 4 பேர் பலி [VIDEO]

wpengine