உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெஹிவளை பகுதியில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலங்கள்

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் ஒரு ஆணும் என காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று காலை 10 மணியாளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்…

wpengine

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு ஆனந்த கல்லூரி அல்லது கிங்ஸ்வுட் கல்லூரிக்கு சேர்க்குமாறு ஆலோசனை

wpengine

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறப்பு…

wpengine