கேளிக்கை

தேங்காய் பரிகாரமே என்னை ஹீரோயீன் ஆக்கியது.. – கீர்த்தி…

தன்னை படத்தில் நடிக்க, தனது தந்தை மனம் மாறி ஓகே சொல்ல வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் தினமும் கடவுளுக்கு தேங்காய் உடைத்தாக சினி உலகில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலிவூட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். சூர்யா, கார்த்தி படங்கள் அவர் வசம் உள்ளது. தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார். கீர்த்தியின் தாய் மேனகா ஒரு நடிகை, தந்தை சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.

கீர்த்தி நடிகையாகப் போகிறேன் என்று கூறியதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சினிமா பழைய மாதிரி இல்லம்மா என்று கூறியுள்ளனர். இதை மேனகாவே டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் மனம் மாறி தன்னை நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு கீர்த்தி தினமும் தேங்காய் உடைத்தது மேனகாவுக்கு ரொம்ப லேட்டாக தான் தெரிய வந்ததாம்…

நான் மட்டும் வேறு வீட்டில் மகளாக பிறந்திருந்தால் இந்நேரம் நடிகையாகியிருப்பேன் தெரியுமா சேச்சி என கீர்த்தி தனது சகோதரியிடம் கூறி கவலைப்பட்டாராம்.

நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த கீர்த்திக்கு பிரியதர்ஷன் தான் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என மேனகா தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..

wpengine

வரலாற்றில் முதற்தடவையாக கதைக்கும் பூனை.. காணத்தவறாதீர்கள் (VIDEO)

wpengine

அனுஷ்காவை கேலி செய்வதை பொறுக்கமுடியாது – கோஹ்லி குமுறல்

wpengine