உள்நாட்டு செய்திகள்

தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவரை பதவி விலகுமாறு பணிப்புரை

தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவர் மற்றும் உதவி தலைவர் இருவரையும் பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர்களின் பதவி விலகல் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது.

தேசிய ஒளடத அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் ஜெயக்கொடி மற்றும் உதவி தலைவர் பேராசிரியர் கிரிசாந்த வீரசூரிய ஆகியோர் அமைச்சர் ராஜித சேனாரத்னவினாலேயே கடந்த வருடம் நியமிக்கப்பட்டனர்.

குறித்த இவர்களின் பதவி விலகல் பணிப்புரைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை அமைச்சரின் இந்த பணிப்புரையை அதிகாரசபையின் பல அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.

Related posts

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Azeem Kilabdeen

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சானக நியமனம்..

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine