உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் மற்றுமொரு கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே மற்றுமொரு கலந்துரையாடல் இன்று(02) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவரும், தவிசாளருமான மஹிந்த தேசப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கல்ந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்

wpengine

மக்கள் வசிக்கும் இடங்களில் ஆயுதக்களஞ்சியசாலைகளை நிறுவ மாட்டோம் – சாகல

wpengine

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை ஜனாதிபதி பதவி விலக்க வேண்டும் – சுமந்திரன்..!

wpengine