உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பிற்கு 25,050 பேர் தயார் நிலையில்

நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளில், பெவ்ரல் மற்றும் ஃகபே ஆகிய அமைப்புகளின் ஊடாக சுமார் 25,050 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

15,050 கண்காணிப்பாளர்கள் பெவ்ரல் அமைப்பின் ஊடாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளதுடன் அதில் 50 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 10,000 பேர் ஃகபே அமைப்பின் ஊடாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேவையேற்படின் இந்த கண்காணிப்பு பணிகளில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தயாராக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கண்காணிப்பு பணிகள் ஜூலை மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related posts

கட்சி தாவவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைகள்

wpengine

சஹ்ரான் ஹாசிமின் வீடியோ; 127 பேர் கைது

wpengine

நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் மஹிந்தவுக்கு அழைப்பு..

wpengine