Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தல் செலவு அறிக்கை – ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களின் ஊடாக தங்களது வருமானச் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு குறித்த தினத்தின் நள்ளிரவு 12.00 மணிக்குள் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய அறிக்கைகளை ஒப்படைக்காமல் இருப்பது தேர்தல் நடைமுறைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி – ரணில் – ரவி மூவரடங்கிய விசேட கலந்துரையாடல்..

wpengine

முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு 9.8 மில்லியன் ரூபா நிதி! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!

wpengine

பருப்பிலும் ‘எல்பாடொக்சீன்’

wpengine