உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரசாரங்களுக்காக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வைக்க முற்றாகத் தடை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல் நேற்று(27) இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இம்முறை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் பிரசாரங்களுக்காக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வைப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்படும்.

மேலும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு செல்லும் போது, 10 பேருக்கும் குறைவான குழுவினரே செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் காவற்துறையினரும் கலந்து கொண்டுள்ளனர்.

#reeshma

Related posts

ஊவா மாகாண சபைக்கு முன்பு பதற்ற நிலை

wpengine

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே இன்று (31) மாலை சந்திப்பு…

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine