உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச வாகனங்களை பயன்படுத்த தடை…

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 02 வாகனங்களைத் தவிர வேறு எந்த அரச வாகனங்களும் தேர்தல் காலங்களில் பயன்படுத்த மு​டியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அலுவலக பணியாளர்கள் அல்லது வேறு எந்த நபரோ அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளின் பொறுப்பு எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பதிவு செய்யப்பட்ட இலக்கங்களுடன் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான அறிவுரைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்காக விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பவற்றைப் பயன்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

###

Related posts

மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் – கருணா

wpengine

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

wpengine

எம்பிலிபிட்டிய கொலை விவகாரம் – நீதிமன்றில் வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு

wpengine