உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன…

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய காமினி நவரத்ன அண்மையில் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சரவை பத்திரங்களை ஆய்வு செய்ய விசேட குழு…

wpengine

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

wpengine

பிரதமரை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(29) சந்திக்கின்றனர்.

wpengine