Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேவேந்திர முனை இரட்டைக் கொலை தொடர்பில், தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டு ஒப்பந்தத்தைப் பெற்ற நபரின் மனைவி, துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட ‘தெஹி பொட்டா’ என்று அழைக்கப்படும் நபரின் உறவினர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய ஒருவர் மற்றும் மேலும் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இன்று (29) மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

போக்குவரத்து சேவையில் சிவில் உடைகளில் பொலிஸார்

wpengine

சஜித் நாளை வடக்கிற்கு விஜயம்

wpengine

பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள், வெடிகுண்டு செயலிழப்பு..!

wpengine