உள்நாட்டு செய்திகள்

தொடரும் கட்சித் தாவல்கள்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பட்ட கட்சி தாவல்கள், தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்த்தரப்பு பக்கமிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஆளுந்தரப்புக்கு மாறியுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான டீ.டீ.மெத்தானந்த சில்வா மற்றும் பி.எல்.அருண சிறிசேன ஆளும் தரப்புக்கு மாறியுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையமாக வைத்தே இக்கட்சித் தாவல் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Related posts

பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சமர்ப்பிக்காது…

wpengine

‘GAJA’ சூறாவளியினால் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்கள் இல்லை..

wpengine

இந்திய – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடப்பது சாத்தியமல்ல – சர்தாஜ் அஜிஸ்

wpengine