உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தொடர்ந்தும் அவமானத்தில் இலங்கை அணி – 06 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ஷான் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் சந்திமால் 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக இர்பான் 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக சர்பராஸ் அஹமட் 38 ஓட்டங்களையும் உமர் அக்மல் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related posts

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை (VIDEO)

wpengine

பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

wpengine

வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

News Editor