Top Story 3உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் 70 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக, இந்த ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில், சுமார் 35 தொடருந்துகள், காலையும் மாலையும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், இன்றைய தினம் மாவட்டங்களுக்குள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்காக, தேவைக்கேற்றவாறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தை விடவும் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

4வது ஒருநாள் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி..

wpengine

மொட்டுக்கட்சியின் முடிவால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்: லக்ஷ்மன் கிரியெல்ல

wpengine

CEB போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு

wpengine