உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேசங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ காரேலே, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, களவானஎஹலியகொட, இரத்தினபுரி நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பஸ் முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்ட முதற் கட்டம் வெற்றி

wpengine

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

wpengine

கஹவத்த – கொடகனந்த கொலைகள் அரசியல்வாதிகளின் சதி – அனுர

wpengine