உள்நாட்டு செய்திகள்

தொழிலாளர் தினத்தில் 45மில்லியன் ரூபாய்களை சம்பாதித்தது இ.போ.சபை

மே தின கொண்டாட்டங்களுக்கு பஸ்களை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபை 45 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மே தினக் கூட்டங்களுக்காக 4 ஆயிரம் பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்கள் மே தினக் கூட்டங்களுக்காக நேற்றைய தினம் பணத்தை செலுத்தி 3 ஆயிரத்து 500 பஸ்களை பெற்றுக்கொண்டுள்ளன.

இதனால், இன்றைய தினம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளுக்கு போதிய பஸ்கள் இல்லாமல் போயுள்ளதுடன், நாளைய தினம் நிலைமை வழமைக்கு திரும்பும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் கூறியுள்ளார்.

Related posts

அனல்மின் நிலையத்தில் மாத்திரம் மகிந்த அரசு 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுள்ளது – சந்திரிக்கா

wpengine

சேயா விவகாரம் – தந்தையினை DNA பரிசோதனைக்கு உள்ளாக்க நீதிமன்றம் கோரிக்கை

wpengine

கொரோனா : நோயாளிகளுக்கு ரொபோ மூலம் சிகிச்சை

wpengine