கேளிக்கை

நடிகர் – நடிகைகள் பயிற்சி எடுத்த பிறகே பாட வேண்டும் – ஏ.ஆர்.ரஹ்மான்…

நடிகர் – நடிகைகள் பயிற்சி எடுத்த பிறகே பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் “தி வாய்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் நடுவராக பங்கேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

அதற்கான விளம்பரப் படப்பிடிப்பின் போது ரஹ்மான் தெரிவித்ததாவது:-
திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

இந்நிலையில், நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்‘’. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

Related posts

IPL-2017: 224,985 ரசிகர்களையும் தாண்டி வரவேற்பு வரிசையில்… [VIDEO]

wpengine

இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டிடத்தின் தற்போதைய நிலை.. [PHOTOS]..

wpengine

நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர்

wpengine