கேளிக்கை

நடிகை சனம்ஷெட்டி பிரச்சினை; இலங்கை தர்ஷன் சாதிப்பாரா? (VIDEO)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, நிச்சயதார்த்தமும் செய்து விட்டு தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று ​பொலிஸ் நிலையத்தில் நடிகை சனம்ஷெட்டி முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தர்ஷன் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். சனம்ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சனம் ஷெட்டியின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாகவும், தன்னை அவர் தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறினார்.

 

மேலும், நான் எங்கே போனாலும் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் அதேபோல் நான் நடிக்க ஒப்பந்தமான படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தியதாகவும் இதனை எல்லாம் பார்த்துதான் அவருக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்ற முடிவை தான் எடுத்ததாகவும் தர்ஷன் கூறியுள்ளார்.

மேலும் திருமண நிச்சயதார்த்தம் குறித்து இலங்கை சென்று என்னுடைய தாயாரை சனம் ஷெட்டி சந்தித்ததாகவும் அப்போது என்னுடைய தாயார் ’நீங்கள் இருவரும் உண்மையாகவே காதலித்தீர்கள் என்றால் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்க தயார் என்றும், தர்ஷனின் தங்கை திருமணம் முடிந்தவுடன் உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக எனது அம்மா கூறினார்கள் என்றும் தர்ஷன் கூறினார்.

மேலும் தான் நடிக்க ஒப்பந்தமான படத்தின் தயாரிப்பாளர்களிடம் சனம் ஷெட்டி சென்று தர்ஷனை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் இதன் காரணங்களால் தான் அவரை தவிர்க்க முடிவு செய்ததாகவும் தர்ஷன் கூறினார். அதேபோல் சனம் ஷெட்டியிடம் மூன்றரை இலட்சம் ரூபாய் மட்டும் வாங்கியதாகவும் அந்த பணத்தையும் தான் பிக்பாஸ் பணம் வந்தவுடன் கொடுத்து விட்டதாகவும் மற்றபடி அவரிடம் எந்த பணமும் பெறவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து இந்தியா சென்று பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தற்போது தான் தமிழ் சினிமா வாய்ப்பு வர தொடங்கியுள்ள நிலையில் குறித்த சர்ச்சை அவருடைய எதிர்காலத்திற்கு கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதுவராக அமிதாப் பச்சன்…

wpengine

இன்று முதல் திரையரங்குகள் காலவரையின்றி மூடல்…

wpengine

மஞ்சு இடத்தை பிடித்த நயன்தாரா..

wpengine