வாழ்க்கை

நமது முகத்தை அழகாக மாற்ற இதை ட்ரை பண்ணி பாருங்கள்…

நமது முகத்தை அழகாக மாற்ற என்னென்னவோ செய்வோம். நமது முகத்தில் உள்ள பிரச்சினைகள் உண்டாகினால் மிக சுலபமாகவே இதற்கு தீர்வை தரலாம்.

அதுவும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டே இதனை சரி செய்ய இயலும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆரஞ்சு வைத்தியம்:
தேவையானவை:
ஆரஞ்சு தோல் பொடி 1 ஸ்பூன்
கடலை மாவு 2 ஸ்பூன்
பால் 2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் ஆரஞ்சு தோலை காய வைத்து பொடியாக அரைத்து கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் பால் சேர்த்து முகத்தில் தடவலாம். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் சுத்தம் ஆகும்.

பப்பாளி:
1 ஸ்பூன் தேனுடன் 2 ஸ்பூன் பப்பாளி சாற்றை கலந்து கொண்டு முகத்தில் தடவி 30 நிமிடதிற்கு பின் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு முகத்தை வெண்மையாக மாற்ற கூடிய தன்மை பெற்றது.

சுருக்கங்களை போக்க:
தேவையானவை:
தக்காளி சாறு 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
பால் 2 ஸ்பூன்

செய்முறை:
தக்காளியை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு, பால் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இளமையான சருமத்திற்கு:
தேவையான பொருட்கள்:
மஞ்சள் அரை ஸ்பூன்
யோகர்ட் 2 ஸ்பூன்
கடலை மாவு அரை ஸ்பூன்

செய்முறை:
யோகர்டுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அடுத்து இதில் மஞ்சளை இறுதியாக கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை நீக்கி விடலாம். சருமத்தை எப்போதும் இளமையாக வைக்க இது உதவும்.

Related posts

கூந்தல் பிரச்சினைகளை தடுக்கும் முட்டை மசாஜ்…

wpengine

இனிப்பு சமோசா…

wpengine

உதட்டின் கருமையை போக்கும் எளிய முறை

wpengine