உள்நாட்டு செய்திகள்

அபயராம விகாரையில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க தடை..

நரஹேன்பிட்டி அபயராம விகாரையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(14) இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பத்பேரியே விமலஞான தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(14) விசாரணைக்கு வந்த போது கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதனால் அதற்கு தடை விதிக்குமாறு கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி விடயங்களை ஆராய்ந்த நீதிபதி அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறி விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி இடம்பெற உள்ளது.

 

(rizmira)

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் – ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை..!

wpengine

சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில்

wpengine

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

wpengine