உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாக கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்…

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாக கிராம சேவகர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது 17 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களின் கோரிக்கைகளுக்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட அங்கத்தவர்கள் தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று

wpengine

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்! மகிந்த ஆவேசம்

wpengine

ஹர்ஷவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்

wpengine