உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பூஜைகளை நிகழ்த்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்…

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள மதஸ்தலங்களில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் விசேட பூஜைகளை நிகழ்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சகல அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு தாம் அறிவுறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டுக்கு சீரான மழை வீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில், பொருளாதார ரீதியான வளர்ச்சியை காணமுடியும். ஆனால் சீரற்ற மழையினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த விடயத்தில் நாட்டுக்கு ஆசீர்வாதம் வேண்டி இந்து, பௌத்த, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதஸ்தலங்களில் விசேட பூஜையை நிகழ்த்துமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

Related posts

நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

wpengine

மத்திய வங்கி பிணை முறிகள் குறித்த விசாரணை – ஆணைக்குழுவின் அமர்வு இடைநிறுத்தம்…

wpengine

அனுமதியற்ற விற்பனை நிலையங்களை அகற்ற நடவடிக்கை…

wpengine