உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார்.

தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் அவுஸ்திரேலியானவின் டே ஸ்ட்ரீட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் பல மாதங்களாக விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் நிரூபித்த நிலையில், அவர் நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை…

wpengine

சம்மாந்துறை (ATI) பணிப்பாளரின் ஆலோசனையில் பேருந்து தரிப்பிடம் புணர் நிர்மானம்!

wpengine

நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம் – அமைச்சர் றிஷாட் தலைமையில்

wpengine