உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வட, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

வல்லப்பட்டை தொகையுடன் 04 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது..

wpengine

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்ல தடை..!

wpengine