உள்நாட்டு செய்திகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 11 அம்சங்கள் அடங்கிய விசேட அறிக்கை

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக தமது கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள 11 அம்சங்கள் அடங்கிய விசேட அறிக்கையையும் மகாநாயக்க தேரர்களிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

இதன்பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க ஆகியோர், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 11 கோரிக்கைகள் அடங்கிய யோசனை திட்டத்தை, தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவிடம், சுதந்திரக்கட்சி கையளித்துள்ளது.

குறித்த யோசனை திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராவணா பலயவின் இணைப்பாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

சஷி வீரவன்சவின் இராஜதந்திர கடவுச்சீட்டு குறித்த வழக்கு ஒத்திவைப்பு

wpengine

இடைக்கால கணக்கறிக்கை : 2வது நாள் விவாதம் இன்று

wpengine