உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று(15) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 75ml இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறித்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை , இடியுடன் கூடிய மழை பொழியும் போது தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் மின்னலால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

 

(rizmira)

Related posts

பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு…

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாது?

wpengine

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியும் நடனமாடும் பிரபலங்களும்

wpengine