உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

wpengine

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

போதைப்பொருள் கடத்தல் மன்னன் சித்தீகிற்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine