உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

நாட்டில் இன்று(26) இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் குறிப்பாக மத்திய, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றருக்கு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேல் மாகாணம் , புத்தளம் மாவட்டம் மற்றும் கிழக்கு , தெற்கு மாகாணங்களின் கடற்கரையோரங்களிலும் காலைவேளைகளில் ஓரளவு மழைபெய்யும் என்றும் திணைக்களம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட இன்று(13) மீளவும் CID முன்னிலையில்…

wpengine

பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

wpengine

எக்காரணம் கொண்டும் 2023 உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த..!

wpengine