உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தெற்கு அந்தமான் தீவிற்கு ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் நாளை(05) முதல் நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் இந்த நிலை பொதுவாக காணப்படும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ICC இனது ODI தரவரிசை பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் மந்த வேகத்தில்..

wpengine

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

wpengine

மின்னலுக்கு மூன்று விவசாயிகள் பலி

wpengine