உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்கக்கூடும்

wpengine

கொள்கலன் குடை சாய்ந்ததில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு…

wpengine