உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

(FASTNEWS|COLOMBO) – சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது…

wpengine

புதிய வரிச் சட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு வரிச் சலுகை..

wpengine

இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள்

wpengine