உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Related posts

ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியம்

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு மேலும் இறக்குமதி தடை!

wpengine

கோப் குழுவின் தலைவர்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு..

wpengine