உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) காலை வெளயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துஅவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

புதிய அரசாங்கத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்குவேன் – மஹிந்த

wpengine

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு

News Editor

தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவரை பதவி விலகுமாறு பணிப்புரை

wpengine