உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(FASTNEWS|COLOMBO) மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான குழுவின் இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில்…

wpengine

உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாட வினாத்தாள் இரத்து – நடந்தது என்ன?

wpengine

அமைச்சர் ஹரீன் இனது யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம்…

wpengine