உள்நாட்டு செய்திகள்

நாட்டில் இனவாதத்தை தூண்டியது கூட்டமைப்பே..- நாமல் பதிலடி..

நாட்டில் நாங்கள் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். நாம் இனவாதத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று(19) சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

“.. உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து ஆட்சியை கவிழ்க்க முனையவில்லை. அத்துடன் யாருக்கும் நாம் ஆட்சியை வழிநடத்தி செல்ல முட்டுக் கொடுக்கவும் தயாராகவில்லை.

நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினையை தீர்க்காமையே தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி பெறுவதற்கு முக்கிய காரணமாகும். எனினும் மக்கள் ஆணையை இன்னும் கூட அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை. யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆணை வழங்கவில்லை. மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே தோல்விக்கு காரணமாகும்.

மேலும் நாட்டில் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவாதத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருகின்றனர்…”  என்றார்.

 

 

#risshma

Related posts

உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு இடமாற்றம்…

wpengine

2016 T20 பயிற்சி போட்டிகளுக்கான கால அட்டவணை – இலங்கை அணிக்கு இரண்டு போட்டி

wpengine

ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

wpengine