உள்நாட்டு செய்திகள்

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிப்பு..

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும்(14) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 50 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இரத்தினப்புரி, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related posts

தொடர்ந்தும் 13 பேருக்கும் விளக்கமறியல்

wpengine

ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம்

wpengine

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine