உள்நாட்டு செய்திகள்

நாட்டில் பல பிரதேசங்களில் மழை…

நாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், வடமேல், சபரகமுவ, தென், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் ஏறத்தாழ 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்;ளுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகர் தலைமையில் இன்று அரசியலமைப்பு சபை கூடுகின்றது

wpengine

டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்

wpengine

ரயில் சாரதிகள் 21ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்..

wpengine