Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டை முடக்குவதா, இல்லையா? – இன்று தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கொவிட்-19 தொற்றால் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கலுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 793 பேர் கைது

wpengine

மகாவலி அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

wpengine

சாம்பியன்ஸ் திட்டம் மற்றும் மாலிங்க – தென்னாபிரிக்க அணி குறித்து மேத்யூஸ் கருத்து..

wpengine