உள்நாட்டு செய்திகள்

நான்காவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் வௌியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ​17ம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 19ம் திகதி முதல் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.

தமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லாட்சி அரசின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine

கைது செய்யப்பட்ட சரத்சந்திர விளக்கமறியலில்.. (UPDATE)

wpengine

35இனைத் தாண்டிய வீரர்களுள் டில்ஷான் முன்னணியில்..

wpengine