உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமலின் மனைவி நாட்டை விட்டு ஓட்டம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிம்மினி ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக க்தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி லிம்மினி ராஜபக்ஷ இன்று (08) காலை  சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக  கூறப்படுகின்றது.

லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன .

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராகபாரிய ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு இரு வவுச்சர்கள்

wpengine

நல்லாட்சியில் பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி…

wpengine

மதஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின், பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

wpengine